அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத் ரவிச்சந்தர். முதல்படத்திலேயே கொலவெறி எனும் பாடலை கொடுத்து உலகளவில் பேசப்பட்ட இசையமைப்பாளரானார். தொடர்ந்து வணக்கம் சென்னை, எதிர்நீச்சல், கத்தி, காக்கி சட்டை, வேலையில்லா பட்டதாரி... என இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. தற்போது அஜித் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அனிரூத் சமூக வலைதளத்திலும் இருக்கிறார். தன் படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் டுவிட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அனிருத்தை ஏராளமான ரசிகர்கள் டுவிட்டரில் பாலோ செய்து வருகின்றனர். அப்படி அவரை பாலோ செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்காக தன் டுவிட்டரில் நன்றியும் தெரிவித்துள்ளார் அனிருத்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின்னர் தமிழ் பட இசையமைப்பாளர் ஒருவருக்கு இந்தளவுக்கு ரசிகர்கள் இருப்பது அனிருத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.