ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தெலுங்கில் உருவாகி வருகின்றது. இப்படத்திற்கு கபார் சிங் 2 அல்லது சர்தார் என பெயரிடப்படலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் பாபி இயக்கி வருகின்றார். புனேவில் துவங்கிய இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்புகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் குஜராத்தில் துவங்கவுள்ளன. இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் இப்படப்பிடிப்பில் பவன் கல்யாண் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பவன் கல்யாண் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இம்மாத இறுதியில் கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.