Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிஜ கத்தியுடன் சசிகுமாரை சண்டை போட வைத்த பாலா!

15 ஜூன், 2015 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Bala-avoid-to-use-doop-instruments-in-shooting

டைரக்டர் பாலாவைப் பொறுத்தவரை தனது படங்களில் நடிப்பவர்கள் டூப் போடுவதை பெரும்பாலும் விரும்பமாட்டார். அந்த வகையில் அவன் இவன் படத்தை இயக்கியபோது, அப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஜி.எம்.குமாரை, வில்லன் ஆர்.கே நிர்வாணமாக்கி தூக்கில் தொங்க விட்டு விடுவார்.


இந்த காட்சியில் நிஜமாலுமே ஜி.எம்.குமாரை ரோப்பில் கட்டி தூக்கினாராம் பாலா. அதோடு, அவரை தூக்கில் இருந்து கீழே இறக்கி வர மரத்தில் ஏறிச்செல்லும் விஷால், மரத்தில் முட்டி முட்டி அழும் காட்சியில், நிஜமாலுமே அவரை மரத்தில் முட்டி நடிக்க வைத்தாராம். இதனால் அடுத்த நாள் விஷாலின் நெற்றியில் பெரிய அளவில் வீங்கிவிட்டதாம்.


அதேபோல்தான், இப்போது சசிகுமாரை வைத்து அவர் இயக்கி வரும் தாரைத்தப்பட்டை படத்திலும் ஒரு சண்டை காட்சியில் சசிகுமாரை, வில்லன் கத்தியால் குத்த வருவது போன்ற காட்சியாம். அதிலும், டூப் கத்தியை பயன்படுத்தாமல் நிஜ கத்தியை வைத்தே சண்டை போடவைத்தாராம் பாலா. இதனால் அந்த காட்சியில் நடித்து முடிக்கிற வரை சசிகுமாரும், வில்லன் நடிகரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் நடித்தார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in