மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
தமிழ்த் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக தங்களது நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறந்த சந்தானம், வடிவேலு இருவருமே ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. சந்தானம் நாயகனாக நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படமும், வடிவேலு நாயகனாக நடித்த 'தெனாலிராமன்' படமும் வெளிவந்து தோல்வியைத் தழுவின. வடிவேலு நாயகனாக நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் மட்டுமே வடிவேலு நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படமாக அமைந்தது. அதன் பின் அவர் நாயகனாக நடித்த 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படமும் தோல்வியைத்தான் தழுவியது. சந்தானம் நாயகனாக நடித்த 'அறை எண் 305ல் கடவுள்' படமும் தோல்விதான் அடைந்தது. ஆனால், மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் வெற்றி பெற்றது.
அதையடுத்துத்தான் சந்தானம் தனி நாயகனாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவந்தது. வடிவேலு நாயகனாக நடித்த 'தெனாலிராமன்' கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிவந்தது. மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அந்தப் படங்கள் தோல்வியைத் தழுவியதால், அடுத்த ரவுண்டுக்கு வடிவேலுவும், சந்தானமும் தயாரானார்கள். இந்த ரவுண்டில் சந்தானம் நடித்து வெளியான 'இனிமே இப்படித்தான்' படம் நேற்று வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த ரவுண்டில் சந்தானம் ஜெயித்து விட்டார். வடிவேலு நாயகனாக நடித்துள்ள 'எலி' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அடுத்து வடிவேலுவும் இந்த ரவுண்டில் ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.