‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வேலாயுதம் படத்தில் விஜய்யின் முறைப்பெண்ணாக நடித்த ஹன்சிகா, தற்போது புலி படத்தில் அவரை ஒன்சைடாக காதலிக்கும் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இளவரசனாக விஜய் நடிக்க, படத்தில் நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவருமே இளவரசி கெட்டப்பில்தான் நடித்துள்ளனர். மேலும், கதைப்படி விஜய், ஸ்ருதிஹாசன் இருவரும் காதலர்களாம். அவர்களின் காதலை ரொம்ப தத்ரூபமாக படமாக்கியிருக்கிறாராம் சிம்புதேவன். ஆனால் வேறொரு ராஜ்ஜியத்துக்கு விஜய் செல்லும்போது அந்த ராஜ்ஜியத்தின் இளவரசியான ஹன்சிகாவுக்கு விஜய் மீது ஒன்சைடு காதல் ஏற்படுமாம். ஆனால், ஒருகட்டத்தில் விஜய், ஸ்ருதிஹாசனை காதலிக்கிறார் என்ற விசயம் அவருக்கு தெரியவரும்போது தான் விலகிக்கொள்வாராம். அதோடு, விஜய், ஸ்ருதிஹாசன் திருமணம் நடைபெறுவதற்கும் ஹன்சிகா பெரிய உதவியாக இருப்பாராம். ஆக, ஆரம்பத்தில் ஹன்சிகா கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததுபோல் இருந்தாலும், கடைசியில் அவரது கதாபாத்திரமும் பேசப்படுவதுபோல் அமைந்துள்ளதாம்.