ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டு, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்து அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார் விஜய்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். அட்லி படத்தில் நடிப்பதற்கு முன்னதாக தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார்.
இம்மாதம் 20 ஆம் தேதி சென்னை திரும்புகிறார் விஜய். 22 ஆம்தேதி புலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட இருக்கின்றனர். விஜய், அட்லி முதன் முதலாக இணையும் புதுப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறதாம்! கிழக்குக் கடற்கரைசாலையில் உள்ள கேரளா ஹவுஸில் இப்படத்தின் துவக்கவிழா நடைபெறுகிறது. மீடியாக்கள், மற்றும் திரையுலகப் பிரபலங்களை அழைத்து மிகவிமரிசையாக இந்த விழாவை நடத்த இருக்கிறார் தாணு. இந்த பட பூஜையில் ரஜினியும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் அடிபடுகிறது. ஜி.வி.பிரகாஷ், அட்லி முதன் முதலாக இணைந்த 'ராஜா ராணி' படப் பாடல்கள் சூப்பர்ஹிட்டாகின.