மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'மைனா' படத்தில் அறிமுகமான விதார்த் தொடர்ந்து வீரம், ஆள், காடு,ஜன்னலோரம் உட்பட பல படங்களில் நடித்தவர். கூத்துப்பட்றையிலிருந்து நடிப்புப் பயிற்சி பெற்று நடிகரானவர் இவர். தொழில்பக்தி கொண்ட விதார்த் நடிப்பு தவிர வேறு சிந்தனை இல்லாதவர். அதன்காரணமாக எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாத நடிகராக இருந்தார் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பவரது மகள் காயத்ரி தேவிக்கும் சமீபத்தில் பழனியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனை தொடர்ந்து விதார்த் - காயத்ரிதேவி திருமணம் இன்று (11-6-15) காலை திருப்பதியில் எளிய முறையில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான ராதாரவி கலந்துகொண்டார். மற்றும் விதார்த்தின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.
ராதாரவி தவிர வேறு நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
விதார்த், காயத்ரி தேவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 17-ஆம் தேதி சென்னையில் விமரிசையாக நடைபெறவிருக்கிறது.