ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகை மட்டுமல்லாது உலகத் திரையுலகத்தையும் தன்னுடைய இசையால் வியக்க வைத்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். பொதுவாக பத்திரிகையாளர்களை ரஹ்மான் சந்திப்பது அபூர்வமாகத்தான் இருக்கும். சென்னைக்கும், அமெரிக்காவுக்கும் அவர் அடிக்கடி பறந்து கொண்டிருப்பதே அதற்குக் காரணம். பல தமிழ்ப் படங்களின் இசையைக் கூட அமெரிக்காவிலிருந்துதான் அவர் செய்து கொடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் வீடியோக்கள் மூலம் அவரிடம் கேள்வி கேட்கும் வசதியை ரகுமான் தற்போது ஏற்படுத்தியிருக்கிறார். இதற்காக கூகுள் பிளஸ் மூலம் g.co\rahmanatgoogle என்ற தனி பக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் பக்கத்தில் கேள்விகளாகவோ, வீடியோ மூலமோ போஸ்ட் செய்து ரஹ்மானிடம் கேள்விகளைக் கேட்கலாம். அதற்கு ரஹ்மான் பதிலளிக்க உள்ளார். ரசிகர்கள் கேள்விகளைக் கேட்கும் போது #RahmanAtGoogle என்ற ஹேஷ்டேக்கை இணைக்கும்படி ரஹ்மான் அவருடைய ஃபேஸ்புக், டிவிட்டர் வலைத்தள பக்கங்களில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜுன் 12ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கூகுள் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு ரஹ்மான் பதிலளிக்க உள்ளார்.