தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சாதனையாளர்களின் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், தடகள வீரர் மில்கா சிங் ஆகியோரின் வாழ்க்கை சினிமாவாக வந்திருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள், அசாருதீன், கங்குலி ஆகியோரின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிக் கொண்டிருக்கிறது. சானியா மிர்சாவும், சச்சின் டெண்டுல்ரும் இன்னும் தங்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அனுமதி தரவில்லை.
இந்த நிலையில் அருணிகா சின்ஹாவின் வாழ்க்கையும் சினிமாவாக தயாராக இருக்கிறது. கொள்ளை கும்பலால் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் ஒரு காலை இழந்த அருணிகா சின்ஹா செயற்கை காலுடன் மலையேற்ற பயிற்சி பெற்று எவெரெஸ்ட் சிகரத்தை தொட்டார். எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற சாதனையை படைத்தார்.