ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஆர்யா, என் டார்லிங். வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று அவரைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை த்ரிஷா டுவிட்டரில், ரசிகர்கள் கேட்ட கேள்வி ஒன்றி்ற்கு பதிலளித்துள்ளார்.
ராணாவுடன் நட்பு பின்பு பிரிவு, தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம், திருமணம் திடீர் ரத்து, என்னை அறிந்தால் படத்தின் வெற்றி, விரைவில் வெளிவர உள்ள அப்பாடக்கர் உள்ளிட்ட படங்கள், போகி மற்றும் தூங்காவனம் படத்தின் சூட்டிங் என எப்போதும் பிஸியாக உள்ள நடிகை த்ரிஷா, நேற்று (ஜூன் 08ம் தேதி), டுவிட்டரில், #asktrishkrish என்ற ஹேஸ்டேக்கில், ரசிகர்களின் கேள்விகளுக்கு சுடச்சுட பதிலளித்தார்.
முன்னணி நடிகர்கள் குறித்தும், அவர்கள் குறித்து, தான் நினைக்கும் கருத்துகள் குறித்தும் த்ரிஷா பதிலளித்துள்ளார். அவற்றில் சில சுவாரஸ்யமான கேள்விகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் வருத்தப்படுவது எதற்காக : இன்னும் ரஜினி சார் உடன் இணைந்து நடிக்காதது
அஜித் நடித்த படங்களில் பிடித்தது : என்னை அறிந்தால், அவருடன் இணைந்து நடிக்கவேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.
இளையதளபதி விஜய் : சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடிக்க அனைவரும் விரும்புவர்.
சூர்யாவை பத்தி ஒரே வார்த்தை : சிறந்த அர்ப்பணிப்பு நடிகர்
சீயான் விக்ரம் : பழகுவதற்கு இனியவர், அனைவரிடமும் கல கல என்று பழகுபவர்.
சிவகார்த்திகேயன் : அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். விரைவில் நடக்கும்