ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆடுகளம் படத்தில் பிரபலமானவர் நரேன். அஞ்சாதே, யுத்தம் செய், ஒஸ்தி, நண்பன், பீட்சா, சுந்தரபாண்டியன், திருடன் போலீஸ் என பல படங்களில் அப்பா மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்தவர். இப்போதும் பல படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இருப்பினும் இவர் சென்னை கே.கே.நகரில் ஒரு நடிப்பு பள்ளியும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் ஒரு ஆசிரியரையும் நியமித்திருக்கும் நரேன், தனக்கு நேரம் இருக்கும்போது தானும் நடிப்பு சொல்லிக்கொடுக்கிறார். அவர் சினிமாவில் பிரபலமான நடிகர் என்பதால் அவரிடம் நடிப்பு பயிற்சி பெற ஏராளமான இளவட்டங்கள் படையெடுக்கிறார்களாம்.இப்போது தனியாக நடிப்பு பள்ளி நடத்தி வரும் ஆடுகளம் நரேன், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, கூத்துப்பட்டறையில் நடிப்பு ஆசிரியராக வேலை பார்த்தவராம். இப்போது கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும், விமல், விஜயசேதுபதி, விதார்த் உள்பட பல நடிகர்கள் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தானாம்.