ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாணா காத்தாடிக்கு பிறகு அதர்வா நடிக்கும் இரண்டாவது படம் "முப்பொழுதும் உன் கற்பனைகள்". இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. "பாணா காத்தாடி" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல்படம் ஓரளவிற்கு நல்ல பெயர் வாங்கி தந்தது. இப்போது அடுத்த படத்திற்கு நடிக்க தயாராகிவிட்டார். டைரக்டர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் "முப்பொழுதும் உன் கற்பனைகள்" என்ற படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக "மைனா" புகழ் அமலா பால் நடிக்கிறார். இவர்கள் தவிர சந்தானம், ரோஜா, ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. படத்தை சென்னை, பெங்களூரு, கேரளா, நியூயார்க் போன்ற நகரங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்தபடத்தில் அதர்வா முற்றிலும் வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறார். முதல் படத்தில் பார்த்த அதர்வாவுக்கும், இப்போது பார்க்க போகும் அதர்வாவுக்கும் ஏகப்பட்ட மாற்றங்கள். உடம்பை ஜிம்மிற்கெல்லாம் சென்று ஏத்தியுள்ளார். மேலும் நடிப்பு பட்டறைக்கு சென்று பயிற்சியும் பெற்றுள்ளார்.