ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தை இயக்கியவர் நலன்குமாரசாமி. அப்படத்தில் விஜயசேதுபதியுடன், பாபி சிம்ஹா, கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்திருந்தனர். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களை அடுத்து இப்படமும் விஜயசேதுபதியின் சூப்பர் ஹிட் பட வரிசையில் இடம் பிடித்தது.
ஆனால் அதன்பிறகு அவர் வேகவேகமாக பல படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். ஆனால் நலன்குமாரசாமியோ, தனது இரண்டாவது படத்தை சூர்யாவை வைத்து இயக்க வேண்டும் என்ற எஸ்கிமோ காதல் என்ற கதையை அவருக்கு சொல்லிவிட்டு கால்சீட்டுக்காக சில ஆண்டுகளாக காத்திருந்தார். ஆனால், சூர்யா வேறு சில படங்களில் நடித்துக்கொண்டு செல்லவே, தற்போது அந்த கதையை விஜயசேதுபதியிடம் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் நலன்குமாரசாமி.
இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் மடோன்னா செபஸ்டியான். இவர் நேரம் பட நாயகன் நிவின் பாலி நடித்து தற்போது வெளியாகியிருக்கும் பிரேமம் என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்திருப்பவர். நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா இடத்தை நிரப்ப ஒரு நடிகை வேண்டும் என்பதற்காகவே இவரை கொண்டு வந்திருக்கிறார்களாம்.
அந்த மடோன்னா செபஸ்டியான், தற்போது தமிழில் நலன்குமாரசாமி இயக்கும் எஸ்கிமோ காதல் படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாளத்தைப்போலவே தமிழிலும் நஸ்ரியா விட்டுச்சென்ற இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கி நிற்கிறார் மடோன்னா.