ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இது நித்யா மேனன் நேரம் என்று சொல்லும் விதமாக வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். அதிலும் கடந்த மாதம் ஒரே நாளில் வெளியான, இவர் நடித்த ஒ காதல் கண்மணி மற்றும் காஞ்சனா இரண்டுமே ஹிட்டானதில் தயாரிப்பாளர்களின் பெஸ்ட் சாய்ஸ் லிஸ்ட்டில் இவர் முதல் ஆளாக இருக்கிறார். இதில் விஷேசம் என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களில் துல்கர் சல்மானுடன் இணைந்து நான்கு படங்களில் நடித்துவிட்டார். இதில் பெங்களூர் டேய்ஸ் தவிர்த்து மற்ற மூன்றிலும் துல்கருக்கு இவர் தான் ஜோடி..
தொடர்ந்து துல்கருடன் இணைந்து நடிப்பதால் உங்களை பற்றிய கிசுகிசு கிளம்ப வாய்ப்பிருக்கிறதே என்று கேட்டால் விழுந்து விழுந்து சிரிக்கிறார் நித்யா மேனன். “துல்கர் எனது நல்ல நண்பர். இன்னும் எத்தனை படங்களில் இணைந்து நடித்தாலும் எங்களைப்பற்றிய கிசுகிசு வரவே வராது. காரணம் துல்கருக்கு ரொம்பவே அழகான மனைவி வீட்டில் இருக்கிறார்” என்று கூறுகிறார் நித்யா மேனன்..