Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காத்திருப்போர் பட்டியல்: ஒரே நாளில் ஒரே இடத்தில் நடக்கும் கதை

05 ஜூன், 2015 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Nandithas-new-movie

பரத் நடித்த யுவன் யுவதி படத்தை தயாரித்த பைஜா டாமின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் காத்திருப்போர் பட்டியல். சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்த சச்சின் ஹீரோ, அட்டகத்தி நந்திதா ஹீரோயின், முண்டாசுப்பட்டி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சதுரங்க வேட்டை படங்களுக்கு இசை அமைத்த ஷால் ரோல்டன் இசைய மைக்கிறார். மரியான் படத்தை இயக்கிய பரத்பாலாவின் உதவியாளர் டி.ராஜசேகர் இயக்குகிறார். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பும், காஞ்சிபுரத்தில் 2ம் கட்ட படிப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.


காத்திருப்போர் பட்டியலின் கதை பற்றி இயக்குனா டி.ராஜசேகர் கூறியதாவது: காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்திற்க்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக என நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு காத்திருப்பு பட்டியலில் காத்திருப்பவர்கள்தான். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய கதை களத்தில் பல்வேறு காரணங்களுக்காக காத்திருப்பவர்களை பற்றி கூறும் கதை தான் இந்த காத்திருப்போர் பட்டியல். இது ஒரே நாளில் ஒரே இடத்தில் பல தரபட்ட மனிதர்களுடன் நடைபெறும் சுவாரஸ்யமான காதல் கதை. என்றார் இயக்குனர் ராஜசேகர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in