டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெயம்ரவி நடித்த பூலோகம் படம் எப்போது வெளிவரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரினால் கூட சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாகிவிட்டது. ஏறக்குறைய விஷால் நடித்த மத கஜ ராஜா படத்துக்கு ஏற்பட்ட நிலைமையில்தான் பூலோகம் படமும் இருக்கிறது. அந்தப்படத்துக்குப் பிறகு ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படம் இம்மாதம் வெளிவர உள்ளது. ரோமியோ ஜூலியட் படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் நடிப்பில் வெளிவரவிருப்பது - 'அப்பாடக்கர்' படம்தான்.
'அலெக்ஸ்பாண்டியன்' படத்தைத் தொடர்ந்து சுராஜ் இயக்கும் இப்படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, த்ரிஷா, அஞ்சலி என இரண்டு நாயகிகள். பூர்ணாவுக்கு சிறப்புத் தோற்றம். இவர்களுடன் சூரி, அஸ்வின் ராஜா, ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். 'டாக்கி போர்ஷன்' என்கிற வசனக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டன.
'சதிகாரி...' எனத் தொடங்கும் பாடல் படப்பிடிப்புக்காக தற்போது தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது 'அப்பாடக்கர்' டீம். இந்த தகவலை அதாவது, தற்போது அங்கு ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார். இயக்குனர் சுராஜ், ஜெயம் ரவி ஆகியோருடன் அஞ்சலியும், த்ரிஷாவும் தாய்லாந்தில் இருக்கிறார்களாம்.