ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. விஷால் தற்போது 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். பாண்டிராஜ் தற்போது 'ஹைக்கூ' படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அதோடு நீ......ண்ட நாட்களாக சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தையும் எடுத்து வருகிறார். இந்தப் படத்திற்காக இன்னும் சில பாடல் காட்சிகளையும், காட்சிகளையும் எடுக்க வேண்டி உள்ளது.
ஆக, தன்னுடைய இரண்டு படங்கள் முழுமையாக முடிவதற்குள்ளாகவே பாண்டிராஜ் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார். இதுவரை வளரும் நட்சத்திரங்களை மட்டுமே வைத்து படத்தை இயக்கி வந்த பாண்டிராஜ், முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்கப்படும் விஷாலை வைத்து எந்த மாதிரியான படத்தை இயக்கப் போகிறார் என்ற ஆவல் எழுந்துள்ளது.
“பசங்க, மெரீனா இப்போது ஹைக்கூ” ஆகிய வித்தியாசமான படங்களையும், 'வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய கமர்ஷியல் படங்களையும், இப்போது 'இது நம்ம ஆளு' என்ற காதல் படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் - விஷால் கூட்டணி கமர்ஷியல் படத்தைத் தருமா அல்லது சமூகப் பொறுப்புடன் கூடிய படத்தைத் தருமா என்பது விரைவில் தெரிந்து விடும்.