ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவதாக வந்த செய்தியை விஷ்ணுவர்தனே மறுத்துள்ளார். பில்லா படத்தின் மூலம் அஜித்குமாரும்-விஷ்ணுவர்தனும் முதன்முறையாக இணைந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து அவர்களது கூட்டணி மீண்டும் ஆரம்பம் படத்தில் இணைந்தது. இந்தப்படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்தசூழலில், ''என்னை அறிந்தால்'' படத்திற்கு பிறகு 'வீரம்' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் துவங்கி வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், அஜித்-56 படத்திற்கு பிறகு, அஜித், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வந்தது. ஆனால் இதனை விஷ்ணுவர்தன் மறுத்துள்ளார். இதுகுறித்து விஷ்ணுவர்தன் கூறியுள்ளதாவது, அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்க எனக்கு ஆசை தான். அவர் சரி என்றால் சொன்னால் நானும் உடனே கதையை ரெடி பண்ணிவிடுவேன். ஆனால் இப்போதைக்கு நாங்கள் இருவரும் இணைந்து படம் செய்யும் எண்ணம் எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.
விஷ்ணுவர்தன் தற்போது யட்சன் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா, விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் ரிலீஸாகும் என தெரிகிறது.