மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உத்தம வில்லன் படத்திற்கு கமல் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் பாபநாசம் படம், ஜூலை 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. கமல் நடிப்பில் சமீபத்தில் வௌியான படம் உத்தம வில்லன். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் கமலுக்கு அடுத்து ஒரு வெற்றி தேவைப்படுகிறது. மலையாளத்தில், மோகன்லால் நடிப்பில் வெிளயாகி வசூலில் சாதனை படைத்து ஹிட்டானதோடு, இந்தியாவின் பல மொழிகளிலும் ரீ-மேக்காகியுள்ள த்ரிஷ்யம் படம், தமிழில் ''பாபநாசம்'' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
மோகன்லால் ரோலில் கமலும், மீனா ரோலில் கௌதமியும் நடித்துள்ளனர். ஜீது ஜோசப் இயக்கியுள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் முடிந்து மாதங்கள் ஆகிவிட்டன. உத்தம வில்லன் ரிலீஸ்க்கு பிறகு இப்படத்தை ரிலீஸ் செய்ய இருந்தனர். அதன்படி இப்போது அதுவும் ரிலீஸாகிவிட்டதால் அடுத்தப்படியாக பாபநாசம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போதைய தகவல்படி ''பாபநாசம்'' படத்தை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பாபநாசம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம்-2 வௌியாக இருக்கிறது. தற்போது கமல், தனது உதவியாளர் ராஜேஷ் இயக்கும் தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார்.