தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எந்தவிதமான மாறுவேடமும் போடவில்லை. ஹெல்மெட் அணிந்துகூட முகத்தை மறைக்கவில்லை. பரபரப்பான கொச்சின் எம்.ஜி.ரோடு, வடக்கு பாலம் ரோடு, பிராட்வே உள்ளிட்ட பிஸியான பகுதிகளில் தனியாகவும் சில சமயம் தனக்கு ஜோடியாக நடிக்கும் மான்சி ஷர்மாவை அமரவைத்து கொண்டும் எந்தவித கூச்சமும் இன்றி மம்முட்டி சைக்கிள் ஓட்டியுள்ளார். இப்படிப்பட்ட காட்சி மார்த்தாண்டன் இயக்கத்தில் தற்போது மம்முட்டி நடித்துவரும் 'அச்சா தின்' என்கிற படத்திற்காக படமாக்கப்பட்டது.
இவ்வளவு பகலில், ட்ராபிக்கில் சைக்கிள் ஓட்டிய மம்முட்டியை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லையா..? “இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் டிஸ்கஷன் செய்தபோதே மம்முட்டி இதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் உற்சாகமாக சம்மதித்தார்.. வாகனங்களில் கேமராவை மறைத்துவைத்து மம்முட்டி சைக்கிளில் பயணிக்கும் காட்சிகளை படமாக்கினோம். அப்படியும் ஒரு சிலர் மம்முட்டியை அடையாளம் கண்டு, நாங்கள் ஷூட்டிங் நடத்துகிறோம் என்பதை தெரிந்துகொண்டு நெருங்கும்போது, டக்கென லொக்கேசனை மாற்றிவிடுவோம்” என்கிறார் படத்தின் இயக்குனர் மார்த்தாண்டன்.