Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விளம்பர சர்ச்சை... டுவிட்டரில் ராதிகா விளக்கம்....!

01 ஜூன், 2015 - 15:27 IST
எழுத்தின் அளவு:
Radhika-statement-on-Amirtha-Advertisment

குழந்தைகள் அதிகமாக சாப்பிடும் மேகி நூடுல்ஸில், அதை சாப்பிடுபவர்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் அளவுக்கதிகமாக கலந்திருப்பதால், மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்திருப்பது மட்டுமல்ல, அதன் விளம்பரப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை மாதுரி தீட்ஷித் ஆகியோருக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது உத்தர பிரதேச அரசு.


மேகி நூடுல்ஸை சாப்பிடும்படி சிபாரிசு செய்யும் முன் அதை நீங்கள் சாப்பிட்டு பார்த்தீர்களா? அதில் நச்சுப்பொருள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? எக்றி ரீதியில் பல கேள்விகளையும் எழுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். இந்த நடவடிக்கையினால் விளம்பரப்படங்களில் நடிக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கமிருக்க, நடிகை ராதிகாவுக்கும் இதேபோன்றதொரு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன.


சென்னை அம்ரிதா என்ற பிரபல கல்வி நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றும் நடிகை ராதிகா, நான் சென்னை அமிர்தாவுல இருக்கேனா? இல்லே... துபாய் 7 ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேனா? என்று சென்னை அம்ரிதா கல்விநிறுவனத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார். இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன் அந்த கல்லூரியில் ஒரு மாணவன் ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.


இந்த சம்பவத்துக்குப் பிறகு சென்னை அமிர்தாவின் விளம்பரத் தூதுவரான ராதிகாவும் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். இதை அறிந்த ராதிகா தன் டுவிட்டர் பக்கத்தில் தன் தரப்பை தெளிவுபடுத்தி இருக்கிறார். நடிகையாக அவர்களின் விளம்பரப்படத்தில் நடித்தேனே தவிர நான் அந்த நிறுவனத்தில் விளம்பர தூதுவர் அல்ல. அந்த கல்விநிறுவனத்தில் சேர்ப்பதற்கு முன் பெற்றோர்கள் விசாரித்து செயல்படவும். அந்த நிறுவனம் பற்றி தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளதால் இனி சென்னை அமிர்தா விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன்! இவ்வாறு ராதிகா கூறியுள்ளார்.


இதேப்போன்று ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கு அடுத்தப்படியாக சிக்கல்கள் உருவாகயிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகையர் கலக்கத்தில் உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in