மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் 1 ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. முன்னதாக மே 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போனது. அதற்கு அந்த படக்குழுவினர் மன்னிப்பு கேட்டது நினைவிருக்கலாம். பாகுபலியின் ஆடியோ ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றம் கண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 1ம் தேதி ரிலீஸ் ஆகின்றது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதிலும் மாற்றம் வருமா என்ற சந்தேகம் டோலிவுட் வட்டாரங்களில் இருந்து வருகின்றது. இந்த படத்தில் பிரபல ஹீரோவான டகுபதி ராணா, பிரபாசுக்கு சமமான எதிரியாக பல்லால தேவா என்ற வேடத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.இதில் பிரபல நடிகைகள் அனுஷ்கா மற்றும் தமன்னா நடிக்கிறார்கள் . முன்னாள் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனும் ராஜமாத்தா என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர்களான பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யர்லாகத்தா ஆகியோர் இணைந்து ஆர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர்.