ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யங் ரிபல் ஸ்டார் பிரபாசுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டோலிவுட்டின் 'தி மோஸ்ட் எல்ஜிபில் பேச்சலர்' என்ற பெயருக்கு உரியவரான பிரபாஸ் திருமணம் பற்றி அதிகம் பேசாமல் இருந்து வந்தார். அவர் தற்போது மிகப்பிரம்மாண்டமான சரித்திர காவியமான பாகுபலியில் நடித்து வருகிறார். இந்த படம் அவரது வாழ்க்கையிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. பாகுபலியின் இரண்டு பாகங்களையும் முடித்த பிறகு அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். பாகுபலி முதல் பாகம் முடிந்து விட்டநிலையில், இரண்டாம் பாகமும் சுமார் 70 சதவீதம் முடிந்து விட்டது என்று இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி கூறியுள்ளார். அவர் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறாராம். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் இருக்கின்றனராம். பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகின்றது.