மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பிரபல ஹீரோவான அல்லரி நரேஷின் திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அவருக்கும் விருபகண்டமனேனிக்கும் திருமணம் நடந்துள்ளது. அல்லரி நரேஷ் தந்தை மறைந்த பிரபல இயக்குனரான இ வி வி சத்யநாராயணா பல வெற்றிப்படங்களை தந்தவர் என்பது நினைவிருக்கலாம். பிரபல மூத்த நடிகையான ரம்பா உட்பட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவர். மொத்த சினிமா உலகமும் திரண்டு வந்து புதுமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்களும், முக்கிய தொழில் அதிபர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு உள்ளனர். அல்லரி நரேஷின் மூத்த சகோதரரும், தயாரிப்பாளருமான ஆர்யன் ராஜேஷ் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்து கொண்டார். திருமணம் நடந்த மண்டபம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.