ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லிங்குசாமி தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் ரஜினிமுருகன். காக்கி சட்டை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள படம் என்பதால் ரஜினி முருகன் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது பல கோடி கடன் பிரச்சனையில் லிங்குசாமி சிக்கியபோது அவருக்கு உதவி செய்தார் ஸ்டுடீயோக்ரீன் ஞானவேல்ராஜா. அதற்கு முன்னதாக ரஜினிமுருகன் படத்தின் படப்பிடிப்பு செலவுகளுக்காக சுமார் மூன்று கோடிவரை பணம் கொடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஜினிமுருகன் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ஞானவேல்ராஜாவுக்கு வழங்கினார் தயாரிப்பாளர் லிங்குசாமி. இன்னும் சில தினங்களில் ஆடியோ வெளியீடும், அடுத்த மாதம் படமும் ரிலீஸ் ஆக உள்ளநிலையில் ரஜினி முருகன் படம் தொடர்பாக, லிங்குசாமிக்கும், வருண்மணியனுக்கும் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினிமுருகன் படத்தின் சாட்டிலைட் உரிமையின் பேரில் வாங்கிய கடனை இதுவரை திருப்பிக்கொடுக்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறாராம் வருண்மணியன். இந்தப் பிரச்சனையில் நாம் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ ரஜினி முருகன் படத்தின் தமிழக உரிமையை லிங்குசாமியிடமே திருப்பிக் கொடுத்துவிட்டாராம் ஞானவேல்ராஜா.