பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சூரியும் தன் சம்பளத்தை கடுமையாக உயர்த்திவிட்டார். எனவே தற்போதுகாமெடியன் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த பஞ்சத்தை தற்போது போக்கி வருவது நான் கடவுள் ராஜேந்திரன்தான். மிரட்டும் வில்லனாக அறிமுகமான நான் கடவுள் ராஜேந்திரன் இப்போது சிரிக்க வைக்கும் காமெடியனாகிவிட்டார். ராஜாராணி படத்துக்குப் பிறகு இவரை காமெடியனான புக் பண்ணவே அனைவரும் விரும்புகின்றனர். டார்லிங், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்களில் ராஜேந்திரனின் காமெடி பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.
நேற்று வெளியான மாஸ் படத்திலும் சில காட்சிகளிலேயே வந்தாலும் கலக்கி இருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன். அதுமட்டுமல்ல மாஸ் படத்தின் வானொலி விளம்பரங்களை நான் கடவுள் ராஜேந்திரனை வைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். நாளுக்கு நாள் தனக்கு மவுசு கூடிக்கொண்டு வருவதை புரிந்து கொண்ட அவர் தன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தினமும் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த அவர் தற்போது தினமும் 1 லட்சம் சம்பளம் வாங்க ஆரம்பித்துள்ளார். அவர் 2 லட்சம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.