ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
2 தேசிய விருதுகளுடனும், 5 சர்வதேச திரைப்பட விழா விருதுகளுடனும், வருகிற ஜுன் 5ந் தேதி தமிழ்நாட்டில் வெளியாகிறது காக்க முட்டை. படத்தை வாங்கியுள்ள ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் சர்வதேச திரைப்படச் சந்தையில் காக்க முட்டையை கணிசமான தொகைக்கு விற்றுள்ளது. இந்திய படங்களை வாங்காத ஜப்பான், தென்கொரிய நாடுகள் கூட காக்க முட்டையை வாங்கி உள்ளது. ஜப்பான், தென்கொரிய நாடுகளில் 100 தியேட்டர்களில் காக்க முட்டை ரிலீசாகிறது.
இதுதவிர அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் மலேசியா, நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் ரிலீசாகிறது. ஒரு பெரிய ஸ்டார் இல்லாத படத்தை முதன் முறையாக மிக உயர்ந்த விலைக்கு விற்றிருக்கிறார்கள். மேற்கண்ட தகவல்கள் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.