தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நல்ல குடும்பப்பாங்கான கேரக்டர்களிலேயே நடிக்க விரும்பும் நான், கவர்ச்சி நடிகை சன்னி லியோனால் தான் குறைந்த அளவு ஆடைகளை அணிந்து கவர்ச்சி நடிகை ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பார்ட்டி பஞ்சாபி ஸ்டைல் என்ற இசை ஆல்பத்திற்காக, ராக்கி சாவந்த் குறைந்த அளவே ஆடையை அணிந்த கவர்ச்சி போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ராக்கி சாவந்த் கூறியதாவது, சன்னி லியோனால் தான் இந்திய திரையுலகம் சீரழிந்து கிடக்கிறது. இளைய தலைமுறையை, அவர் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சன்னி லியோன், விரைவில் இந்தியாவை வி்ட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில், அவர் திரையுலகத்தை விட்டாவது விரைவில் வெளியேற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்ள இருப்பதாக ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.