ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. சென்னை 28, சரோஜா, கோவா என சிறிய நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த அவருக்கு, அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய பிறகுதான் நட்சத்திர டைரக்டர் அந்தஸ்து கிடைத்தது.
அதையடுத்து, கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, இப்போது சூர்யா நடிப்பில் மாசு படத்தை இயக்கி முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் மங்காத்தா படத்தை இந்தியில் இயக்குவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வெங்கட்பிரபு, மீண்டும் தமிழ் படமொன்றையே இயக்குகிறார். அப்படியென்றால் அது மங்காத்தா-2வாக இருக்குமா? என்று கேட்டால், அப்படம் இப்போதைக்கு இல்லை. ஆனால், கண்டிப்பாக மங்காத்தா-2 வை இயக்குவேன். அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார் வெங்கட்பிரபு.