ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த போது தமிழில் எந்த அளவிற்கு வெற்றிகரமான முன்னணி நாயகியாக ஜோதிகா இருந்தாரோ, அதே அளவிற்கு தெலுங்கிலும் இருந்தார். அங்கும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள '36 வயதினிலே' படத்தில் நடித்து தமிழில் வெற்றிகரமாக அடுத்த இன்னிங்சை ஆரம்பித்து விட்டார்.
இப்போது இந்தப் படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். 'ராவம்மா மகாலட்சுமி' என்று பெயரிடப்பட்டுள் இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜுன் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தமிழில் இந்தப் படம் லாபகரமான படமாக அமைந்ததையடுத்து சில நாட்களுக்கு முன் 'சக்சஸ் மீட்'டையும் நடத்தி முடித்து அனைவருக்கும் நன்றியும் சொல்லிவிட்டார்கள். அதே போல இந்தப் படம் தெலுங்கிலும் வெற்றி பெறுமா என்பதுதான் அடுத்த கேள்வி. மலையாள ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட, தமிழ் ரசிர்களும் ஏற்றுக் கொண்ட இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களை எந்த அளவிற்கு சென்று சேரும், ஜோதிகாவுக்கு மீண்டும் மற்றுமொரு வெற்றியை தெலுங்கு வடிவில் கொடுக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.