Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாசு - ஆந்திரா, கேரளா நிலவரம்..!

29 மே, 2015 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Mass-Status-of-Andhra-and-Kerala

சூர்யா கடைசியாக நடித்து வெளி வந்த அஞ்சான் படம் வரலாறு காணத அளவில் தோல்வியடைந்தது. இந்த நிலையிலும், அவரது லேட்டஸ்ட் படமான மாசு என்கிற மாசிலாமணி படத்துக்கு இம்மியளவும் வரவேற்பு குறையவில்லை என்பதுதான் ஆச்சர்யம். வரவேற்பு குறையவில்லை என்பது மட்டுமல்ல, முன்னைவிட பல மடங்கு அவருக்கு மாஸ் கூடி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. அந்த வரவேற்பை பயன்படுத்திக் கொண்டு பணம் பண்ண நினைத்த விநியோகஸ்தர்கள் மாசு படத்தை மிகச்சரியாய் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.


மாசு என்கிற மாசிலாமணி படம் ராக்சஷடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாகி உள்ளது. நேரடி தெலுங்குப்படங்களை மிஞ்சும் அளவுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 570 தியேட்டர்களில் ராக்சஷடு படத்தை வெளியிட்டுள்ளனர். அதேபோல் கேரளாவிலும் மாசு என்கிற மாசிலாமணி படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கேரளாவில் சுமார் 200 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கேரளா ரைட்ஸ் 3 கோடிக்கு விலைபோய் இருக்கிறது. சூர்யா நடித்த படங்களிலேயே கேரள ரைட்ஸ் அதிக தொகைக்கு விலைபோனது இந்தப்படம்தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in