ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மூத்த ஹீரோவான விக்டரி வெங்கடேஷ் ஒரு முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். டோலிவுட்டில் வெங்கடேஷுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் எப்போதுமே குடும்பப்பாங்கான கதை களத்தை கொண்ட படங்களில் தான் அதிகம் விரும்பி நடிப்பார். இதன் விளைவாக அவர் படங்கள் எல்லாம் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு பொழுது போக்கு படமாகவே இருக்கும். இந்த இமேஜ் மூலம் அவர் படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. இதன் பின்னர் அவர் மல்டிஸ்டாரர் என்று அழைக்கப்படும் ஒரே படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கதாநாயகர்கள் நடிக்கும் படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது அவரது ரசிகர்கள் அவரை மிகவும் பவர்புல்லான வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனராம். இதனை பூர்த்தி செய்யும் விதமாக அவர் பிரபல இயக்குனர் அகுல சிவா இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் டிராமாவில் நடிக்க உள்ளார். அகுல சிவாவின் லக்ஷ்மி, துளசி போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வரும் ஜூன் 6ம் தேதி அதாவது அவருடைய தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ராமநாயுடுவின் பிறந்த தினத்தில் வெளிவர உள்ளது.