ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினிமுருகன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் திட்டத்தில் காத்திருந்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் சிவகார்த்தியேகன். அதாவது மதனுக்கு தருவதாக வாக்குறுதி அளித்த கால்ஷீட்டை கேன்சல் செய்ததோடு, அந்த கால்ஷீட்டில் தானே சொந்தப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
சிவகார்த்திகேயனின் திடீர் மனமாற்றத்தால் அதிர்ச்சியடைந்த மதன் தற்போது மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்துவிட்டார். தனுஷ் தயாரித்த வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை ஆகிய படங்களை வெளியிட்ட மதன், தற்போது ஜெயம்ரவி நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தையும் வாங்கி வெளியிட உள்ளார்.
ரோமியோ ஜூலியட் படத்தின் தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமத்தை காஸ்மோ சுரேஷ் என்பவர் வாங்கி விட்டார். அவரிடமிருந்து சென்னை ஏரியாவை மட்டும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வாங்கி வெளியிட உள்ளார். இந்தப் படம் வெற்றியடைந்தால் அடுத்து ஜெயம்ரவியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல் அடிபடுகிறது.