Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனிக்கும் கமரகட்டு! இயக்குநருக்கு புதுப்பட வாய்ப்பு!

29 மே, 2015 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Kamarakattu-director-getting-more-offers

சமீபத்தில் வெளியான சின்ன பட்ஜெட் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் என்றால் அது கமரகட்டு படம்தான். பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், சாட்டை படத்தில் நடித்த யுவன் இருவரையும் வைத்து சின்ன பட்ஜெட்டில் இந்தப் படத்தை இயக்கி இருந்தார் ராம்கி ராமகிருஷ்ணன். அடிப்படையில் ஆர்ட் டைரக்டரான இவர், டைரக்ஷன் ஆசையில் ஆர்ட் டைரக்டரை வேலையைவிட்டுவிட்டு முழுமூச்சாக படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். பல வருடப்போராட்டத்துக்குப் பிறகு சொல்லி அடிப்பேன் என்ற படத்தை இயக்கினார். 95 சதவிகிதம் படம் முடிவடைந்தநிலையில் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனையினால் அப்படம் வெளிவரவில்லை. அதன் பிறகு இதயம் திரையரங்கம் என்ற படத்தை இயக்கினார். அந்தப்படத்தினாலும் பெரிய நன்மைகள் விளையவில்லை.


இந்நிலையில்தான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தைத் தயாரித்த படநிறுவனத்துக்கு கமர கட்டு கதையைச் சொன்னார். சுமார் 25 கதைகளைக்கேட்டு நிராகரித்திருந்த அந்நிறுவனம் ராம்கி ராமகிருஷ்ணன் சொன்னகதையில் இம்ப்ரஸ்ஸாகி கமரகட்டு படத்தை தயாரிக்க முன் வந்தது. சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில், 45 நாட்களில் இந்தப்படத்தை எடுத்து முடித்தார் ராம்கி. படத்துக்கு பூஜை போட்ட தினத்திலிருந்து ஆறு மாதத்துக்குள் படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர். 80 லட்சம் பப்ளிசிட்டி செய்து கமரகட்டு படத்தை சுமார் 150 தியேட்டர்களில் வெளியிட்டனர். படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு மட்டுமின்றி, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர்காரர்கள் என அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது கமரகட்டு படம். வணிக ரீதியில் இப்படம் வெற்றியடைந்ததால் ராம்கி ராமகிருஷ்ணனுக்கு புதுப்பட வாய்ப்புகள் பேச்சுவார்த்தைநிலையில் இருக்கிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in