‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தை இயக்கியவர் மணிகண்டன். இவர் தற்போது விதார்த் தயாரித்து நடிக்கும் குற்றமும் தண்டனையும் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான கதையை காக்காமுட்டை படத்திற்கு விருது கிடைப்பதற்கு முன்பே கேட்ட விதார்த், அந்த கதை தனக்கு பெரிய திருப்புமுனையை தரும் என்று நம்பிக்கையில்தான் தயாரிக்கவும் ஒப்புக்கொண்டாராம். ஆனால், அப்படி அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது காக்கா முட்டை படத்துக்கு தேசிய விருது கிடைத்தது விதார்த்துக்கு பெரிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளதாம். அதனால் குற்றமும் தண்டனையும் படத்தில் புதிய எனர்ஜியுடன் நடித்துள்ளாராம் அவர். மேலும், காக்கா முட்டை படத்தில் சிறப்பாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷையே இந்த படத்தின் நாயகியாகவும் நடிக்க வைத்திருப்பதால், இதுவரை தன்னுடன் நடித்த எந்த ஹீரோயினிகளுடனும் நடிப்பில் போட்டி போடாத விதார்த். இந்த படத்தில் அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறாராம். ஆக, இந்த படம் தனக்கு இன்னொரு மைனாவாக இருக்கும் என்ற பெரிய நம்பிக்கையுடன் காணப்படுகிறார் விதார்த்.