'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சினிமாவில் ஹீரோ-ஹீரோயினிகளை விட கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகள்தான் அதிக படங்களில் நடிப்பார்கள். அதாவது ஒரேநேரத்தில் ஒரு டஜன் படங்களுக்கு மேல் கால்சீட்டை பிரித்துக்கொடுத்து நடிப்பார்கள். இரவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தால் மறுநாள் காலை 9 மணிக்கு இன்னொரு படப்பிடிப்பில் இருப்பார்கள்.
சென்ட்ராயனும் தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடியன், வில்லன், நண்பன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதனால் இவர் கைவசமும் பத்து படங்களுக்கு மேல் தற்போது உள்ளது. ஆனால் இப்படி அதிகப்படியான படங்கள் அவரிடம் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளதாம்.
அதாவது எனது சம்பளம் இதுதான். இதில் சல்லி காசு குறைந்தாலும் நடிக்க மாட்டேன் என்று அடித்து பேசாமல், படங்களின் பட்ஜெட்டைப்பொறுத்து அட்ஜஸ்ட் பண்ணி சம்பளத்தை வாங்கிக்கொள்கிறாராம் சென்ட்ராயன். அவரது இந்த அனுசரணை காரணமாகத்தான் அவர் கையில் எப்போதும் அதிகப்படியான படங்கள் இருந்து கொண்டேயிருக்கிறதாம்.