ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் வெற்றிப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் நடிகை சார்மி விலைமாதுவாக நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜோதிலக்ஷ்மி படத்தின் டிரைலர் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் நடிகை சார்மி, அசத்தலான நடனம், நளினம், கம்பீரம் என டிரைலர் முழுவதும் மிரட்டியிருக்கிறார். இது வரை ஜோதிலக்ஷ்மி பட டிரைலரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். தயாரிப்பாளர் கல்யாண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் இசையமைத்துள்ளார்.