சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ் திரை உலகில் வில்லன் கதாப்பாத்திரங்களில் மட்டுமல்லாது குணசித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் நாசர் தெலுங்கு, இந்தி, மலையாளப் படங்களிலும் நடித்து வருகின்றார். டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது படமான டிக்டேட்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நாசர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீவாஸ் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நாசரைச் சந்தித்து டிக்டேட்டர் படத்தின் திரைக்கதை மற்றும் வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியுள்ளார். இப்படத்தின் கதை பிடித்திருந்ததால் நாசர் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் இன்று முதல் துவங்க உள்ளன.இப்படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.