ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமான ஆட்டோ ஜானி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, எப்பொழுது திரையிடப்பட்டாலும் புது படத்தை போன்று பரபரப்பை ஏற்படுத்தும் பாட்ஷா படத்தை போல இருக்கும் என்ற வதந்தி தற்போது பரவி உள்ளது. ஏனெனில் அந்த படத்தில் ரஜினி ஒரு ஆட்டோ டிரைவராக வருவார். பிளாஷ் பேக்கில் ஒரு டானாக வந்து ஒரு கலக்கு கலக்குவார். அதே போன்ற கதை தான் ஆட்டோ ஜானியும் என்று ஒரு வதந்தி காட்டுத்தீ போல பரவி இருக்கின்றது. மேலும் மெகா ஸ்டார் ஏற்கனவே ரவுடி அல்லுடு என்ற படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் குழம்பி போய் உள்ளதாக தெரிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மெகா ஸ்டாரை திரையில் காண அவரது ரசிகர்கள் தவம் இருக்கும் நிலையில் இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் மெகா ஸ்டாரை வித்தியாசமான முறையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.