மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
டோலிவுட்டின் இளம் நாயகிகளுள் ஒருவரான சோனல் சௌகான் தற்போது நடித்து வெளிவர உள்ள பண்டக சேசுகோ படத்தில் பிரபல முன்னாள் நடிகையான நக்மா நடித்த வேடத்தை போன்றது என்று அவர் கூறியுள்ளார். இந்த படத்தை பற்றி அவர் மேலும் கூறியதாவது, இந்த படத்தில் எனக்கு பணக்கார தொழில் அதிபர் வேடம். அதாவது நடிகை நக்மா நடித்த கரண மொகுடு படத்தில் அவர் ஏற்று நடித்த வேடத்தை போன்றது. இந்த வேடம் எனக்கு ஒரு புது நம்பிக்கையை தந்திருக்கின்றது. நிச்சயம் அனைவரும் என் வேடத்தை ரசித்து புகழ்வர். பிரபல யங் ஹீரோவான ராமுடன் நான் நடித்திருக்கின்றேன். அவர் நடிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தார். அவருடன் சேர்ந்து நடித்தது ஒரு இனிய அனுபவமாகும். அவர் செட்டில் பாசிடிவ்வாக இருப்பார். அதனால் அனைவருக்கும் அந்த எனர்ஜி கிடைப்பதாக நான் உணர்கின்றேன்', என்றார். இந்த படம் நாளை (மே 29ம்) தேதி ரிலீசாகிறது. இந்த படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கோபிசந்த் மலினேனி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.இந்த படத்தில் இரண்டு நாயகிகள். சோனல் சௌகான் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பது நினைவிருக்கலாம்.