ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல ஹீரோவான சுதீர் பாபு ஒரு சூப்பர் ஸ்டாரின் மருமகன், மற்றொரு சூப்பர் ஸ்டாருக்கு மைத்துனர். அதாவது இவர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் இளைய மகளான பிரியதர்சினியின் கணவராவார். இதனால் இவர் பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு மைத்துனர் ஆகிவிட்டார். இந்நிலையில் சுதீருக்கு பிரின்ஸ் மீது வருத்தம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது இவர் சமீபத்தில் நடித்த மொசகல்லகு மொசகடு படத்தின் ப்ரோமோஷன்களில் பிரின்ஸ் அதிக ஆர்வம் காட்டவில்லை என சுதீர் பாபு தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களில் கூறி வருத்தப்பட்டதாக தெரிகிறது. பிரின்ஸ் தனது டுவிட்டர் மூலமாக கூட தனது படத்திற்கு ஆதரவு தந்து இருக்கலாம் என்றும் வருத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் விளம்பரமும், ப்ரோமோஷன்களுமே முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதை மறுக்க முடியாது. மேலும் ஹீரோ சுதீருக்கு பிரேம கத சித்ரம் படத்திற்கு பிறகு பெரிய பிரேக் எதுவும் இல்லை. அதனால் அவர் ஒரு பெரிய ஹிட் கொடுக்க காத்து இருக்கிறார்.