இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
டோலிவுடின் பிரின்சஸ் மகேஷ் பாபு மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தின் உறுதி செய்யப்பட்ட தலைப்புடன் பஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் 31 தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சாடிலைட் உரிமத்திற்கான விற்பனை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு திரை உலகில் அதிக ரசிகர்கள் பலம் கொண்ட மகேஷ் பாபு மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பலத்த போட்டிகளுக்கு மத்தியில் பெரும் விலை கொடுத்து பிரபல ஜீ தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் நடிகை சுகன்யா மற்றும் நடிகர் கெஜபதி பாபு ஆகியோர் மகேஷ் பாபுவிற்கு அம்மா அப்பாவாக நடித்துள்ளனர். மைத்திரி மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.