'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முத்துநகரம் படத்தை இயக்கிய திருப்பதி, தற்போது இயக்கியிருக்கும் படம் திருட்டு ரயில். ரக்சன், கெய்ட்டி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு ஆடியோ-ட்ரைலரை வெளியிட்டார்.
இப்படம் குறித்து இயக்குனர் திருப்பதி பேசுகையில், சினிமாவில் 20 வருடங்களாக போராடி முத்து நகரம் படத்தை முதலில் இயக்கினேன். அதையடுத்து இந்த திருட்டு ரயில் படத்தை இயக்கியிருக்கிறேன். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் 4 இளைஞர்களைப்பற்றிய கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.
திருட்டு ரயில் என்றால் டிக்கெட் வாங்காமல் திருட்டு ரயில் ஏறி வருவதைத்தான் சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் ரயிலை கடத்துவதை மையமாக வைத்து இயக்கியிருக்கிறேன். இதில் நடித்துள்ள ரக்சன், சென்ட்ராயன் உள்ளிட்ட இளைஞர்கள் அதிக எனர்ஜியுடன் நடித்துள்ளனர். மேலும், இந்த படம் மட்டுமின்றி படத்தின் பாடல்களும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.
மேலும், இந்த படத்தின் நாயகன் ரக்சனின் தந்தை கு.க.செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் என்பதால், அவரது மகனும், நடிகருமான உதயநிதி இவ்விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ, நான் விழாவுக்கு வந்தால் மற்றவர்களின் கவனம் என் பக்கம் திரும்பும். ஆனால் இது ரக்சனின் படம் என்பதால் அவரைத்தான் மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்லி கலந்து கொள்ள மறுத்து விட்டதாக விழாவில் பேசியவர்கள் தெரிவித்தனர்.