இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'வீரம்' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அஜித் நடிக்கும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் துவங்கியது. ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்கிறார் லக்ஷ்மிமேனன். அஜித், லக்ஷ்மிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படமாக்கப்பட்டது. அஜித்தின் தங்கையாக நடிக்கும் லக்ஷ்மிமேனன் கல்லூரிக்குச் செல்வதுபோலவும், அவருக்கு துணையாக அஜித் செல்வதுபோன்ற போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின.
சில தினங்களே படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் 'தல 56' படத்திற்கான முதல் ஷெட்யூல் தற்போது முடிவடைந்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை அஜித்துடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாத படத்தின் ஹீரோயின் ஸ்ருதிஹாசன், இந்த 2வது ஷெட்யூலில் கலந்து கொள்ள இருப்பதாகவும், லக்ஷ்மிமேனன் நடிக்கும் காட்சிகள் ஜூன் 2வது வாரத்தில் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
'வீரம்' படத்தை முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் எடுத்த சிவா, அஜித்தின் 56வது படத்தை முழுக்க முழுக்க நகரத்து பின்னணியில் எடுக்கிறாராம். இப்படத்தின் இடம்பெறும் ஃப்ளாஷ்பேக் காட்சி கோல்கட்டாவில் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக சென்னையிலேயே செட் அமைத்து படம்பிடிக்க இருக்கின்றனர். அவுட்டோர் காட்சிகளுக்காக மட்டும் கோல்கட்டா சென்று படம்பிடிக்க இருப்பதாகவும் 'தல 56' படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.