Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை - அமீர்கான் பேட்டி!

27 மே, 2015 - 16:43 IST
எழுத்தின் அளவு:
I-Love-to-do-Hollywood-Films-Aamir-Khan

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமீர்கானின் நடிப்பில் வௌியாகி, உலகளவில் சக்க போடு போட்டு வசூலையும் குவித்த படம் பி.கே. இந்திய படங்களில் அதிக வசூலை குவித்த படமாக பிகே. இருக்கிறது. இந்நிலையில் பிகே படம் தற்போது சீனாவிலும் வௌியாகி அங்கும் வசூலை குவித்து கொண்டிருக்கிறது. பிகே படம் தொடர்பாக சமீபத்தில் சீனா சென்றிருந்தார் அமீர்கான். அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும், தனது அடுத்த படமான டங்கல் பற்றி பகிர்ந்து கொண்டதாவது...


பிகே படம் தொடர்பாக சீன பயணம் எப்படி இருந்தது.?


3 இடியட்ஸ் படம் சீனாவில் வௌியாகி சத்தமின்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து பிகே படத்திற்கு சீன ரசிகர்கள் எந்த மாதிரியான வரவேற்பு கொடுப்பார்கள் என்ற ஒரு பதட்டம் இருந்தது. ஆனால் இப்போது படம் அங்கும் சக்க போடு போட்டு கொண்டிருக்கிறது. சீன மக்கள் பிகே படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாய் இருக்கிறார்கள். சீனாவில், விமான நிலையத்தில் நான் போய் இறங்கியதும் அங்கு ஏராளமான ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். இரண்டு தியேட்டருக்கு நான் சென்றேன். அங்கு ரசிகர்கள் அப்படியொரு வரவேற்பு கொடுத்தார்கள். தியேட்டர் தவிர்த்து தியேட்டருக்கு வௌியேயும் பல இடங்களில் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். பூமியில் வாழும் நட்சத்திரம் என சில ரசிகர்கள் புகழ்ந்தார். கஜினி, ரங் தே பசாந்தி, தலாஷ், 3 இடியட்ஸ் உள்ளிட்ட எனது பல படங்களை பார்த்து ரசிகர்களாகி இருக்கிறார்கள்.


பிகே படம் சீனாவில் வௌிவருவதற்கு முன்பே இணையதளத்தில் பலர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சீன மக்கள் அதிகம் பேர் இந்திய படங்களை பார்க்க விரும்புகிறார்கள். சீன நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலரை நான் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் எனது படங்களை பார்த்திருக்கிறார்கள். இது இந்திய சினிமாவுக்கு கிடைத்த வெற்றி தான். எனது இந்த சீன பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இனிமையான பயணம்.


சீனாவில் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் ஏதேனும் நடந்ததா.?


சீன ரசிகர்கள் அப்படியொரு அன்பும், மரியாதையும் செலுத்துகிறார்கள். பெரும்பாலான ரசிகர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, ஆனாலும் என் படத்தை பார்க்க ஆவலாய் இருக்கிறார்கள். இது என் மனதை தொட்டது. பீஜிங் மக்கள் மட்டுமல்ல, ஜப்பானில் இருக்கும் ரசிகர்கள் கூட இங்குவந்து படம் பார்த்து செல்கிறார்கள். இந்திய சீன மக்களுக்கு ஆக்ஷ்ன் மற்றும் ஹூயூமர் படங்கள் பிடிக்கிறது.


இப்படியொரு சூழல் சீனாவில் இந்திய படங்களுக்கான திருட்டு விசிடிக்களை தடுக்க உதவுமா.?


நிச்சயமாக. சீன மக்கள் அதிகளவில் இந்திய படங்களை பார்க்க ஆவலாய் இருக்கிறார்கள். ஆனால் சீனாவில் 40 வௌிநாட்டு படங்களை தான் திரையிட அனுமதி உண்டு. அங்கு இதை கண்டிப்பான முறையில் கடைபிடிக்கிறார்கள். 100-க்கு 90 சதவீதம் ஹாலிவுட் படங்கள் தான் ரிலீஸாகின்றன. அதனால் நிச்சயமாக மக்கள் தியேட்டரில் சென்று படம் பார்ப்பார்கள்.


ஜாக்கி சானை சந்தித்த அனுபவம் பற்றி.?


ஜாக்கி சானின் மிகதீவிர ரசிகன் நான். 1988ம் ஆண்டு அவரது போலீஸ் ஸ்டோரி-2 படத்தை அடுத்தடுத்து இருமுறை பார்த்தேன். ஜாக்கி சானின் அதிரடி சண்டை மட்டுமல்ல, அவரது நகைச்சுவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவருடன் இணைந்து இரவு விருந்து உண்டேன். என்னுடன் இயக்குநர் ஸ்டான்ட்லியும் கலந்து கொண்டார்.


எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்களில் நடிப்பீர்களா.? வாய்ப்பு எதுவும் வந்ததா.?


நிச்சயமாக நல்ல வாய்ப்பு வந்தால் ஹாலிவுட் படங்களில் நடிப்பேன். ஆனால் என்னை ஈர்க்கும்படியான வாய்ப்புகள் வரவில்லை. புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என்னிடம் அனுகினார்.


இந்திய - சீன ரசிகர்கள் இடையே ஏதேனும் வித்தியாசம் உள்ளதா.?


அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரை எல்லா ரசிகர்களும் ஒன்றாகத்தான் தெரிகிறார்கள். அதேசமயம், நம்மளை காட்டிலும் சீன ரசிகர்கள் இந்திய படங்கள் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவாரா ஹூன் பாடலை ஜாக்கி சான் பாடினார். இந்திய சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.


உங்களது அடுத்தபடமான டங்கல் பற்றி சொல்லுங்க...?


டஙல்கல் படத்திற்கு உடல் எடையை சற்று அதிகரித்து இருக்கிறேன். பெண் சிசுகொலையையும், பெண்களுக்கு அதிகாரமளிப்பது உள்ளிட்ட விஷயங்களை இப்படத்தில் இருக்கும். படத்தில் கீதா, பபிதா என இரண்டு பவர்புல்லான ரோல் உள்ளது. தற்போது அந்த ரோலுக்கான பெண்களை தேடி வருகிறோம். அவர்களது கேரக்டர் மல்யுத்தம் தொடர்பானது என்பதால் அதற்கு ஹீரோயின்களை தேடி வருகிறோம்.


உடல் எடையை அதிகரிக்க எந்தமாதிரியான டயட் கடைபிடிக்கிறீர்கள்.?


டங்கல் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க கடுமையாக உழைக்கிறேன். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 20 கிலோ எடை கூடியிருக்கிறேன். அடுத்தமாதம் இன்னும் 5 கிலோ அதிகரிக்க இருக்கிறேன். இந்த வயதில் உடல் எடை கூடுவது சுலபமானது தான், ஆனால் அதை குறைப்பது தான் சற்று கடினம் என்று நினைக்கிறேன்.


இவ்வாறு அமீர்கான் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in