‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'ஆக்சன் ஹீரோ பைஜூ' என்கிற படத்தில் அதிரடி போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் நிவின்பாலி. '1983' படத்தின் மூலம் நிவின்பாலியின் கேரியரை உச்சத்தில் ஏற்றிய அப்ரிட் ஷைன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். கேரள போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் சில யதார்த்த நிகழ்வுகளின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். வெறுமனே சீரியஸாக மட்டும் இல்லாமல், காமெடி, இசை இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இப்போது லேட்டஸ்டாக இந்தப்படத்தில் இணைந்துள்ளார் அனூப் மேனன்.. இவரும் '1983' படத்தின் வெற்றிக்கூட்டணியில் ஒருவர் தான். சொல்லப்போனால் அந்தப்படத்தில் கிரிக்கெட் கோச்சாக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் ஏகோபித்த மனதுடன் பாராட்டப்பட்டது. தற்போது 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் மீண்டும் நிவின்பாலியுடன் இணைந்து நடிக்கும் தனது மகிழ்ச்சியை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் அனூப் மேனன். இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் நிவின்பாலியும் ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளார்.