'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மா.கா.பா என்றால் உங்களுக்கு தெரியும்.. ஆனால் ம-சு-க பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? குழம்பவேண்டாம்.. அது ஏதோ சீன மொழி பெயர் அல்ல. மலையாளத்தில் உருவாகிவரும் படத்தின் பெயர் தான்.. அதாவது மஞ்சள்-சுவப்பு-கருப்பு என்பதன் சுருக்கம் தான் இந்த ம-சு-க. இந்தப்படத்தில் பசுபதி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். பசுபதிக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். பசுபதி ஏற்கனவே மலையாளத்தில் 'பிக் பி', 'நம்பர் 22 மதுரா பஸ்' உட்பட நான்கு படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் ஜனனி ஐயர் பத்திரிகையாளராகவும், பசுபதி லாயராகவும், பிரதாப் போத்தன் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். ஒரு பேட்டிக்காக பிரதாப் போத்தனை சந்திக்க மூணாறு செல்லும் ஜனனி ஐயர், அங்கே பசுபதியை சந்திக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீட் நுனிக்கு வரவைக்கும்படி இருக்குமாம்.