ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து '36 வயதினிலே' படம் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஜோதிகா. கடந்த 15ம் தேதி வெளியான இந்தப் படம் தயாரிப்பு நிறுவனத்தாலேயே வெற்றி பெற்ற படம் என அறிவிக்கப்பட்டது. சுமார் 20 கோடி வரை படம் வசூலிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கடந்த வாரமே தெரிவித்தனர். இன்று மதியம் இப்படத்திற்கான நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா வந்து கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக ஜோதிகா நாயகியாக நடித்த காலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு, பத்திரிகை பேட்டி என்று அதிகமாக கலந்து கொண்டதில்லை. பெரும்பாலும் அவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தார். '36 வயதினிலே' படத்திற்காக நன்றி தெரிவிப்பதைக் கூட சூர்யாவின் டிவிட்டர் கணக்கின் மூலம்தான் தெரிவித்திருந்தார். தனியாக ஒரு பத்திரிகைச் செய்தியாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை. இந்தப் படத்தின் இசை வெளியீட்டின் போது தமிழில் பேசி அவருக்கென ஒரு இமேஜை மீண்டும் உருவாக்கிவிட்டார். படமும் இப்போது வெற்றி பெற்று விட்டதால் இன்று நடைபெற உள்ள நன்றி சந்திப்பில் ஜோதிகா கலந்து கொள்வாரா ? என்று மதியம்தான் தெரியும்.