சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரஜினி கமல் அஜித் சூர்யா விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் பிறந்தநாள் என்றால் மட்டுமே ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். அதன்காரணமாக அவர்களின் ரசிகர்கள் உருவாக்கும் ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும். முதல்முறையாக காமெடியன் ஒருவரின் பெயர் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.
அது வேறு யாருமல்ல.. கவுண்டமணிதான். அவரின் பிறந்தநாளை (மே 25) முன்னிட்டு #HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தது. தமிழ்சினிமாவின் தலைசிறந்த காமெடியன்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் கவுண்டமணியின் காமெடி காலத்தைக் கடந்தது. செந்திலுடன் சேர்ந்து அவர் அடித்த காமெடிகளை மிஞ்ச இப்போது வரை இன்னொரு கூட்டணி உருவாகவேயில்லை. எதிர்காலத்திலும் வாய்ப்பு இல்லை.
பல வருடங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவுண்டமணி கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் காரணமாக திரைத்துறையைவிட்டு விலகியிருந்தார். இப்போது வாய்மை, 49ஓ என மீண்டும் அடுத்த இன்னிங்ஸஸுக்குத் தயாராகிவிட்டார். 1939 ஆம் வருடம் பிறந்த இவர் ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்து அதன்பிறகு மிகப்பெரிய காமெடியனாக உருவெடுத்தார். இவரது உண்மையான பெயர் சுப்ரமணி கருப்பையா என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்தியவர்களில் சிலர்...
http://www.dinamalar.com/twitter_galatta_detail.asp?id=27