ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித்துக்கு தங்கையாக தற்போது 'தல 56' படத்தில் நடித்து வருகிறார் லட்சுமிமேனன். இந்தப் படத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடிக்கிறார். நிழலில் கல்லூரி மாணவியாக நடித்து வரும் லட்சுமிமேனன் விரைவில் நிஜத்திலும் கல்லூரி மாணவியாக இருக்கிறார். 'கும்கி' மூலம் லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது அவர் படித்துக்கொண்டிருந்தார். நடித்துக் கொண்டே படிப்பைத்தொடர்ந்த அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றிகரமாக பாஸ் செய்தார். அவருக்கு இப்போது 18 முடிந்து 19 வயது நடந்து கொண்டிருக்கிறது. இப்போது +2விலும் பாஸ் செய்துவிட்ட லட்சுமிமேனன் விரைவில் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறார் .
இதுகுறித்து தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்...''இன்று இன்னொரு வெளியீடு. ஆனால் இது பர்சனல். ஆம்... +2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. என்னுடைய கடின உழைப்பிற்கு கடவுள் காட்டிய கருணையால் நான் +2வில் பாஸாகியிருக்கிறேன். என்னுடைய ஆசிரியர், குடும்ப உறுப்பினர்கள், என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!'' என்று குறிப்பிட்டிருந்தார். நடிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் இருக்கும் லட்சுமி மேனன் கல்லூரியில் சேர்ந்து படித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம்.